Tag Archives: காவற்துறை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

உயிர்த்த ஞாயிறு

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு வழிசமைத்து, காவற்துறை மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 31ம் திகதி உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. எனினும் அவர்கள் சார்பில் …

Read More »

பாரவூர்தி மோதுண்டு ஒருவர் பலி

பாரவூர்தி

பாணந்துறை பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிற்றூந்தின் சாரதி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 56 வயதுடைய நுகேகொடை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாணந்துறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More »

அதிரடி சுற்றிவளைப்புக்கள்

தற்கொலை

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வெடிப்பொருட்களுடன் தாக்குதல்தாரிகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் 250-5680 இலக்க தகட்டை கொண்ட சிற்றூர்ந்து புளியங்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்துடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மதவாச்சி – தல்கஸ்வெவ பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அநுராதப்புரம் பிரதான …

Read More »

தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்வதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!

Read More »

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Read More »

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பலியானோரின்

நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 பேரினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Read More »

இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை

சர்வதேச காவல்துறை

நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச காவல்துறை முன்வந்துள்ளது. சர்வதேச காவல்துறையின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார். டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Read More »

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

உயிரிழந்தவர்களின்

நாட்டின் 8 இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 115 பேர் தொடந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 25 பேர் அவசர சிகிச்சை பிரிவில் பெற்று …

Read More »

காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்..

காவற்துறை

பயங்கரவாத ஒழிப்பு குறித்த சரத்தினை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்ட ஒழுங்குமுறையின் கீழ் வர்த்தமாணி அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கும் அதிகாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Read More »