Tag Archives: உயிர்த்த ஞாயிறு

விசேட அறிக்கை அடுத்த வாரத்தில்

வெடி குண்டு

ஏப்ரல் 21 இல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அவரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை …

Read More »

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை

சம்பந்தப்பட்டவர்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமை பாரிய பிரச்சினைக்குரியதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபையின் கூட்டம் இடம்பெறாமலிருந்தது பாரிய தவறாகும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தலைவர்களும் உரிய முறையில் செயற்பட்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு!

ஜனாதிபதியை

கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More »

விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று

விசேட தெரிவுக்குழுவின் சாட்சி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 3இல் இன்று முற்பகல் ஆரம்பமான தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகளை அறிக்கையிட ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட முதலாவது நபராக சாட்சியமளித்தார். தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால், பாதுகாப்புச் செயலாளரிடம் சாட்சி விசாரணைகள் …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்… இதுவரை 89 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம்…!

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் பூர்தியாகின்றது. இதனை முன்னிட்டு நாளை வடமாகாணத்தில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதற்கமைய காலை 8.45 அளவில் வழிப்பாட்டுத் தளங்களின் மணியோசை ஒலிக்கச் செய்து அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

நாளைய தினம் தீர்மானம்

நாளைய தினம் தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாத காலம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, விவாதத்திற்கு மேலதிக காலத்தை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் அவர் …

Read More »

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி!

ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்களாயின் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். அத்துடன் …

Read More »

ஷங்ரில்லா குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது

ஷங்ரில்லா

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கண்டியில், சந்தேகத்துக்குரிய மகிழுந்து ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், குறித்த மகிழுந்தானது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் அக்கரைப்பற்றுக்கு சென்றதாகவும், எனினும், அன்றைய தினம் …

Read More »