Tag Archives: இலங்கை

‘போனி’ சூறாவளி – பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்னும்

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘போனி’ சுறாவளியானது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பலத்த சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொகுதி ஏப்ரல் 30ஆம் திகதி வரை …

Read More »

ஐ.எஸ் அமைப்பு செயற்பாட்டாளர்கள் 03 பேர் தற்கொலை

தற்கொலை

பாதுகாப்பு தரப்பினரால் கல்முனையில் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது தமது 3 செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டமையை ஐ.எஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ். பிரசார பிரிவான அல் அமாக் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து …

Read More »

கோட்டைவிட்ட இலங்கை அரசு: மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

கோட்டைவிட்ட

இலங்கையில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து இலங்கை அரசு நாடுக் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு, …

Read More »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கோட்டாபய தெரிவிப்பு!

கோத்தபய ராஜபக்ச முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரொயிட்டர்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால், இவ்வாறான தாக்குதல்களை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தி இருக்க முடியும். அரசாங்கம் இந்த …

Read More »

நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர்

நாட்டு மக்களுக்கான

இலங்கையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இந்த பயங்கரவாதிகளை அழிப்பதால் மாத்திரம், பூகோளரீதியான பயங்கரவாதத்தை அழித்துவிட …

Read More »

குண்டுதாரியொருவரின் அவுஸ்திரேலிய உறவு உறுதி

இந்தியா

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவரான அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட், அவுஸ்திரேலியாவில் கல்விகற்ற காலத்தில் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. 2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில், மெல்போனின் ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி கற்றுள்ளார். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான அவரது தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ள …

Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் …

Read More »

சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

வெடிப்பு சம்பவம்

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று மாலை மற்றும் இரவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 16 பேர் சந்தேகத்தின் …

Read More »

அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..!

மீண்டும் ஊரடங்கு சட்டம்

தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார். இதேவேளை , கிடைக்கும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் …

Read More »

அனைத்து உதவிகளும் இலங்கைக்கு வழங்கப்படும் – உலகத் தலைவர்கள்

ஜனாதிபதி

தற்போதைய சந்தர்ப்பத்தில் தம்மால் இயலுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது …

Read More »