இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, …
Read More »மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 …
Read More »இந்தியப் பிரதமாின் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கான செய்தி
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் …
Read More »இலங்கையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Read More »பலாலி வானூர்தி நிலையத்தை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும்
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்காக, பலாலி வானூர்தி நிலையத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, விமானப் பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
Read More »ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பம்
அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கையில் இருந்து ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் அரசாங்கமே ஏதிலிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமுலாக்கியுள்ளது. இதனால் படகுமூலம் செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதுடன், அரசியல் அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கின்றவர்கள் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெற்றால், …
Read More »திருப்பி அனுப்பப்பட்டுள்ள புகழிடக்கோரிக்கையாளர்கள்
படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத முற்பகுதியில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கருதப்படும் குறித்த படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் கடந்தவாரம் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று …
Read More »இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கூப்பர்
அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அடுத்தவாரம் இலங்கை வந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார். அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்திக்கவுள்ள அவர், பாதுகாப்பு, சமாதனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
Read More »ஸ்டாலினை இலங்கைக்கு அழைத்துள்ள விக்னேஸ்வரன்
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் …
Read More »இலங்கைக்கான சுற்றுலா தடையை தளர்த்திய சீனா!
பயங்கரவாத தாக்குதலை அடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு …
Read More »