கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …
Read More »முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில் மிதயா
மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை விட்டு உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் என வேறுபாடற்று மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன. எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்களை இவ்விடத்தை …
Read More »பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு !
யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் …
Read More »முக்கிய தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய இராணுவம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில், பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்களை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 0112 43 42 51 அல்லது 011 40 55 105 அல்லது 011 40 55 106 முதலான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல் …
Read More »