Tag Archives: அரசாங்கம்

தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என கோரிக்கை

தீவிரவாத எதிர்ப்பு

பிரேரிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் இவ்வாறான சட்டமூலத்தை விலக்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் …

Read More »

சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

சிறுபான்மையினரை

வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன. அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நாட்டின் சில இடங்களில் வன்முறைகள் …

Read More »

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி!

ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்களாயின் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தேவையான வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். அத்துடன் …

Read More »

அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பயங்கரவாத தடை தொடர்பான சரத்து மாத்திரம் உள்ளீர்க்கப்பட்டு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின்கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும், நாட்டு மக்களினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, காவல்துறையினருக்கும், இராணுவதினருக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று இரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிந்த காவல்துறை ஊரடங்கு …

Read More »

காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்..

காவற்துறை

பயங்கரவாத ஒழிப்பு குறித்த சரத்தினை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்ட ஒழுங்குமுறையின் கீழ் வர்த்தமாணி அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கும் அதிகாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Read More »