பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!#Elections2019 #GoVoteTN @ECISVEEP #ECISVEEP @TNelectionsCEO pic.twitter.com/AcABcHc8zi
— Suriya Sivakumar (@Suriya_offl) 18. april 2019
நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Suriya #Jyothika