மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால், இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து மூன்று சீசனை தொடர்ந்து வழங்கி வருவது கமல் மட்டும் தான்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீனில் இருந்து கமல் வெளியேற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த சசனை சிம்பு தொகுத்து வழங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.மேலும், சிம்பு விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதானவர் கிடையாது.
சிம்பு ஏற்கனவே ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக ப்மங்கேற்றுள்ளார்.
மேலும், விஜய் டிவி நடத்திய பல்வேறு நிகழ்ச்சியில் சிம்பு சிறப்பு விருந்தினராகவும் சென்றுள்ளார்.
எனவே, சிம்பு பிக் பாஸ் வருவதற்கும் பெரும்பாலான வாய்ப்பும் இருக்கிறது.