மீண்டும் புயலா

மீண்டும் புயலா ? மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியப் பெருங்கடல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வெக்கையை உண்டு பண்ணும் நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

குறிப்பாக நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, போன்ற இடங்களில் மழை அதிகமாக பெய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்திய வங்கக்கடலோரத்தில் புயல் போவதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு விடுத்துள்ளது. பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதயில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுமண்டல்ம் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக கடற்கரையை நோக்கி இந்தப்புயலானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …