புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 143 விசைப்படகுகளில் சுமார் 400 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.

இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி முனிவேல், ஸ்டீபன்ராஜ், மணிகண்டன், குமார் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …