இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.
நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டது.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, ஐக்கிய நாடுகளின் நாகரீகங்களின் கூட்டணிக்கான விசேட உயர் பிரதிநிதி மிகுஏல் ஏஞ்சல் மொரனினோஸ், இலங்கை வந்துள்ளார்.
அவர் நேற்று கொழும்பில் குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் எதிர்கட்சித் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.