சிவகார்த்திகேயனின்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் வைரலாகி உள்ளது.

இந்த படம் இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/kjr_studios/status/1167794210205945858
இந்த நிலையில் ‘ஹீரோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சியாக உள்ளது இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல் வில்லனாக நடிக்கின்றார்.

யுவன் சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …