சீமான்
சீமான்

தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் – சீமான் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டையே இரண்டாக பிரித்தாலும் பிரிக்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “காஷ்மீரை போல தமிழகத்தையும் இரண்டு துண்டாக பிரித்தாலும் பிரிப்பார்காள்.

வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து, சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள்.

நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம். ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …