ஜெயலலிதா

என்னிடம் மிகவும் அன்பாக பேசுபவர் ஜெயலலிதா! – மனம் திறந்த சீமான்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து தன்னிடம் ஜெயலலிதா பேசியதாக சீமான் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக மற்றும் மற்ற கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ”ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்தபோது என்னிடம் மிகவும் கனிவோடும், அன்போடும் பேசினார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து நிறைய விஷயங்கள் பேசினார். ஹிலாரி க்ளிண்டனை அவர் சந்தித்தபோது ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து 45 நிமிடங்களுக்கும் மேலாக பேசியதாக என்னிடம் கூறினார்.

வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவராமல் எதையும் செய்ய முடியாது. நாம் எல்லாரும் சேர்ந்து போராடி மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/xaC9jhrSiH0

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …