பரோலில் வருகிறாரா சசிகலா? தினகரனை ஓவர் டேக் செய்யும் திவாகரன்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிறையில் உள்ள சசிகலாவை பரோலில் வெளியே கொண்டு வர திவாகரன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. இவர் தண்டனை காலத்திற்கு முன்னதகாவே நன்னடத்தை விதி அடிப்படையில் வெளியே வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், தண்டனை காலம் முடிந்த பின்னரே சசிகலா வெளிவருவார் என பரப்பண அக்ரஹார சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலாவின் தம்பி திவாகரன் அவரை பரோலில் வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆம், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கும் சசிகலாவின் அக்கா மகளான பாஸ்கரன் மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயயிக்கப்பட்டது.

எனவே அடுத்து இவர்களது திருமணம் விரைவில் நடக்க உள்ள நிலையில் இதற்காக சசிகலாவை பரோலில் அழைத்து வர திவாகரன் முயற்சித்து வருகிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் திருமண நிச்சயத்திற்கு டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லையாம்.

இதற்கு முன்னர் இரு முறை தனது கணவரின் உடல்நல குறைவின் போதும் பின்னர் அவரது மரணத்தின் போதும் பரோலில் இருந்து வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/jvqRLMYl_P4

About அருள்

Check Also

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 23 கார்த்திகை 2019 சனிக்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Sharesஇன்றைய ராசிப்பலன் 23 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 23.11.2019 இன்றைய …