சாக்‌ஷி

பிக்பாஸ் சாக்சி வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக வந்த சாக்ஸி, வனிதா-ஷெரின் ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஒரு பிரச்சனையின் போது ஷெரினை ஆறுதல் படுத்தும்போது ’குரைக்கும் நாய்கள்’ என்று கூறி இருந்தார்.

அவர் மக்களை தான் அவ்வாறு கூறுவதாகவும் பலர் சுட்டிக் காட்டிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது அவர் தனது விளக்கத்தை அளித்தார்.

தான் மக்களை அவ்வாறு கூறவில்லை என்றும், தனக்கு தமிழ் ஆங்கிலம் இரண்டும் மாறி மாறி பேசுவதால் அவ்வாறான ஒரு தவறு நடந்து விட்டதாகவும், அப்படியே தான் தவறாக ஏதாவது பேசி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்

இந்த நிலையில் சாக்ஸி அகர்வால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும்…..

எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தும் இருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது அறிக்கை பார்வையாளர்களை பொதுமைப்படுத்துவதாக இல்லை, ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி.

உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கின்றேன்

உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கின்றேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கின்றேன், நீங்கள் என் குடும்பத்தை போன்றவர்கள், அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.

இவ்வாறு சாக்ஷி அகர்வால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …