தமிழ்ப் பொண்ணுக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கணுமா?

தமிழ்ப் பொண்ணுக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கணுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு குறித்து ரித்விகா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

16 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதனால் கண்டிப்பாக அவர் தனது அரசியல் குறித்த பேச்சையும் இதில் சேர்த்து கொள்வார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரித்விகா தற்போது பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்ப் பெண் என்று கூறியது தொடர்பாக நான் இதுவரை விளக்கவில்லை.

அதைப் பற்றி வரும் மீம்ஸ்களை கவனித்து வருகிறேன். முதலில் தமிழ்ப் பெண் என்ற வார்த்தையை நான் மட்டுமே உபயோகப்படுத்தவில்லை.

நிறைய பேர் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு நாள் பொன்னம்பலம், ஜனனி மற்றும் நான், சேர்ந்து நீச்சல்குளம் அருகே பேசிக் கொண்டிருந்தோம்.

பொன்னம்பலம் பாலிவுட் படங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், அங்கு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறினார்.

அப்போது நான் பிக்பாஸ் டைட்டிலை ஒரு தமிழ்ப் பெண் பெற வேண்டும்.

நான் வெளியேறிவிட்டாலும் நீ பிக்பாஸில் வெற்றி பெற வேண்டும் என்று ஜனனியிடம் கூறினேன்.

இது பொதுவானது தான். நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று கூறவில்லை’ என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …