பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ராஜிவ் வழக்கில் 7 பேரையும் விடுவிக்கக்கோரி பிரதமருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த 28 ஆண்டுகளை சிறையிலேயே தாங்கள் கழித்து விட்டதை கருத்தில் கொண்டு, எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கக் கோரி, எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தாங்கள் எழுவரும், ஒருநாள் வெளிச்சத்தை காண்போம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பியான்ட் சிங்கை கொலை செய்த 8 பேரை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக அறிந்ததாகவும், இந்த முடிவை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் அவர்களை விடுவித்து விட்டு, எழுவரை மட்டும் விடுவிக்க மறுப்பது ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற அடிப்படைக்கு முரணானதாக உள்ளதாகவும் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கடந்த 28 ஆண்டுகளை சிறையிலேயே தாங்கள் கழித்து விட்டதை கருத்தில் கொண்டு, எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் பாருங்க :

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …