ரஜினி, விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜினி, விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இயக்குனர் ராஜு முருகன் ஒரு எழுத்தாளரும் ஆவார்.

இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ”யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இருக்க, நம்ம பையனுக்கும் ஒரு பேர் வச்சு விடுங்க” என்று அந்த திரைப்படத்தின் கதாநாயகனை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

இதனால் கொந்தளித்த விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள், சமூக வலைத்தளங்ளில் ராஜு முருகனை கண்டித்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் அவ்வாறு பேசியதாகவும், விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் உழைப்பால், அர்ப்பணிப்பால் முன்னேரியவர்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/Dir_Rajumurugan/status/1156861133430505472

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …