ரஜினி
ரஜினிகாந்த்

சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சீன அதிபரை கௌரவிக்கும் வகையில் பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன அதிபருக்கு வழங்கப்படும் விருந்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்பிதழை ஏற்று சீன அதிபர் விருந்தில் ரஜினி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தின் மூலம் விஜய்யின் நெருங்கிய உறவினராகும் அதர்வா!

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …