சூப்பர் ஸ்டார்

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக இருந்தாலும் அதற்கு முன்னர் அவர் சிறைக்கு சென்றுவிடுவார் என்றும் கூறினார்.

அவர் எதற்காக சிறை செல்வார் என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, ‘அதை அவர் அரசியலுக்கு வரும்போதோ அல்லது 2021ஆம் ஆண்டோ தெரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறி சஸ்பென்ச் வைத்தார்.

சுப்பிரமணியம் சுவாமி கடந்த சில மாதங்களாகவே ரஜினி, கமல் இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்பதும் அந்த விமர்சனத்திற்கு கமல் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருவதும், ரஜினி அமைதியாக இருந்து வருவதும் தெரிந்ததே

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …