இமயமலைப் பயணம் நன்றாக இருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ந் தேதி இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த படத்தின் படப்பிடிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப்பயணமாகவும் ரஜினி இமயலை சென்றதாக கூறப்படுகிறது.
ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ரஜினி தியானம் மேற்கொண்டார்.
பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ரஜினி அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டு, தியானம் மேற்கொண்டார்.
ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர், தமது பயணம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இதையும் பாருங்க :
தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?
சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!
150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!
யுத்தத்தில் சரணடைந்த 2994 புலிகள் படுகொலை; கோத்தா வாக்கு மூலம்..!