ரஜினியின் 168

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டியளித்தார்.

இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. எந்திரன், பேட்ட, படங்களுக்கு பிறகு ரஜினி படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் 168-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/sunpictures/status/1182520593368764416

தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …