ரஜினி

புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும்,

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சௌந்தர்யாவிற்கு வேத் என்ற மகன் பிறந்தான் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யா கணவர் விஷாகன் தொழிலதிபர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அதில் கோடி கணக்கில் வருமானம் திரட்டி வந்த விஷாகன் தற்போது மாமனார் ரஜினியின் உதவியுடன் ஹீரோவாக அவதாரமெடுக்கவுள்ளாராம்.

இவர் ஏற்கனவே ‘வஞ்சகர் உலகம் ‘ படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அதில் மூன்று பேரில் ஒருவராக நடித்தவர் தற்போது ஹீரோவாக நடிக்க போகிறாராம்.

இதற்காக ரஜினி தனது தீவிர ரசிகரும் பேட்ட படத்தின் இயக்குனருமான கார்த்திக் சுப்பாராஜிடம் மருமகனுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்துள்ளாராம்.

தலைவர் சொல்லி ரசிகர் கேட்காமலா போவார்…

எனவே கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விஷாகன் களமிறங்குவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

நியுசிலாந்து பள்ளிவாசல் மீதான் தாக்குதலுக்கு பழிதீர்க்கவே இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …