ஜெயங்கொண்டத்தில்

ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல் – பொன்பரப்பி தாக்குதல் எதிரொலி !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நேற்று தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதற்கு எதிராக இன்று ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர்.

மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று பரபரப்பான சூழல் உருவானது.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மேலும் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …