நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்க்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வாட்ஸாப்ப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக …
Read More »அமுலுக்குவரும் ஊரடங்கு சட்டம்.
நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தெமட்டகொடை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் முப்படையினரும் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடை பகுதியில் இறுதியாக மூன்று வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »தெமட்டகொடையில் குண்டுவெடிப்பு.
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பலியானவர்கள் பற்றியோ அல்லது படுகாயம் அடைந்தவர்கள் பற்றியோ எதுவித தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »துளிர்க்கும் மனிதநேயம்,குருதி வழங்க குவியும் குருதிக்கொடையாளர்கள்.
இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இரத்தம் இன்றி மருத்துவர்கள் திண்டாடினார்கள்,இதனையடுத்து நாட்டில் உள்ள அனைவரும் ரத்ததானம் வழங்கி உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணப்போதனா வைத்தியசாலையில் குருதி வழங்குவதற்குக் குருதிக் கொடையாளர்கள் நுற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு …
Read More »அமைச்சர் மனோ கணேசன், சம்பவ இடத்திற்க்கு விரைந்தார்.
அமைச்சர் மனோ கணேசன் அவர்கள், இந்தப்பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். மேலும், இவ் பயங்கரவாதத்தாக்குதல்கள் திட்டமிட்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இத் தாக்குதல்கள் ஒரு சிலரின் கேவலமான அரசியல் உள்நோக்கத்திக்காக,இந்த நாட்டின், தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கிடையில் வேற்றுமையை தூண்டிவிடுவதற்க்காக நடத்தப்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது என்றும் இதற்கு அரசாங்கம் ஒரு போதும் அடிபணியாது என்றும் …
Read More »மட்டக்களப்பு குண்டுவெடிப்பு சம்பவம்,சோகத்தில் மூழ்கியுள்ள மக்கள்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை (21) காலை ஆராதனையின் போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் அமைந்துள்ள பகுதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காணப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காயப்பட்டவர்களுக்கு தீசிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை …
Read More »சற்றுமுன்னர் , தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்பு.
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதேவேளை பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மிருகக் காட்சிசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »இலங்கையில் குண்டுவெடிப்பு,160 பேர் பலி,பலர் படுகாயம்
இலங்கையில் குண்டுவெடிப்பு,160 பேர் பலி,பலர் படுகாயம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த …
Read More »அவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்?
கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து எரித்துக் கொன்றவனின் மர்ம உறுப்பை வெட்டி எறியுங்கள் என யாஷிகா ஆவேசமாக பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 23 வயது இளம்பெண் சிவில் என்ஞினியரிங் படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கியபடி பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளை …
Read More »