இன்றைய பஞ்சாங்கம் 22-04-2019, சித்திரை 09, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 11.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 …
Read More »யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார்? என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள் என்றும் …
Read More »குண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது!
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் தம்புள்ளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காத்தான்குடி மற்றும் மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Read More »போக்குவரத்து சேவைகள்
நேற்றைய தினம் மடடுப்படுத்தப்பட்;ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார். இதேபோன்று இன்று காலை 6.00 மணி முதல் ரெயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று …
Read More »பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் …
Read More »பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
Read More »விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த …
Read More »இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான …
Read More »குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என நடிகை ராதிகா கூறியுள்ளார். ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா தனது டிவிட்டரில் இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நான் …
Read More »இலங்கை குண்டுவெடிப்பு: ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் கண்டனம்
இலங்கையில் உள்ள மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இன்று காலை ஆறு இடங்களிலும் சற்றுமுன் இரண்டு இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த குண்டுவெடிப்புக்கு கண்டும் கண்டனம் …
Read More »