சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்றலாம்

தமிழக அரசு

சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக மாற்ற விரும்புபவர்களின் வசதிக்காக, அவற்றை ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, சர்க்கரைக்கான குடும்ப அட்டையை மாற்ற விரும்புவோர் குடும்ப அட்டையின் நகலை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் வரும் 26 ஆம் …

Read More »

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை

இலங்கை

இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்ச, வரும் 29ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதிய அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தெரிவித்த அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த செய்தியை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 கார்த்திகை 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 20 கார்த்திகை 2019 புதன்கிழமை – Today rasi palan – 20.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 20-11-2019, கார்த்திகை 04, புதன்கிழமை, அஷ்டமி திதி பிற்பகல் 01.41 வரை பின்பு தேய்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 08.04 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 08.04 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் …

Read More »

கோத்தபய பதவியேற்புக்கு எதிராக உண்ணாவிரதமா? கஸ்தூரி பதில்

கஸ்தூரி

இலங்கையின் புதிய அதிபராக நேற்று கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தபோது லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட மாதிரி தற்போது தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக தங்களுடைய அச்சத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய இலங்கையின் அதிபராக பதவியேற்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் …

Read More »

கோத்தபய ராஜபக்சேவை புறக்கணித்த இலங்கைத் தமிழர்கள்

தமிழர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டு அரசியல் மற்றும் இந்தியாவுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் இரும்பு மனிதர் என்று சிங்களர்களால் அழைக்கப்படும் இவர் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப்போரை முன்னின்று நடத்தியவர். இதனாலே இந்தத் தேர்தலில், தமிழர்கள் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணி …

Read More »

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு

தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கடந்து 5 ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, நிதி ஆதாரம் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இச் சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவும், லாபகரமானதாக மாற்றவும் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு …

Read More »

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இதில், உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும், அரசு செயல்படுத்ததி வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்

Read More »

இன்றைய ராசிப்பலன் 19 கார்த்திகை 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 19 கார்த்திகை 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 19.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 19-11-2019, கார்த்திகை 03, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 03.35 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.22 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர்- நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் …

Read More »

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில்

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் …

Read More »

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானி சாகர்

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் கரையோர கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணை ஏற்கனவே முழுகொள்ளவை எட்டியுள்ள நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக நீர் வரத்து உள்ளதால் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு …

Read More »