வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த 03 பேர் கைது

கொக்குவில்

முல்லேரியாவ – களனிமுல்ல பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 32 28 மற்றும் 12 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை

பாடசாலைகளில்

நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவேளை, இன்று மாலை 1 மணி தொடக்கம் கொழும்பு பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய தினம் தீர்மானம்

Read More »

நாளைய தினம் தீர்மானம்

நாளைய தினம் தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாத காலம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, விவாதத்திற்கு மேலதிக காலத்தை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் அவர் …

Read More »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி

இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு பிரிவினால் பயங்கரவாதத்தினை அழித்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரொய்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

Read More »

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் வெளியான செய்தி..

இந்தியா

கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சவுதி அரேபியா அறிந்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அல்-அஹெட் இணையத்தளம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப்-இனால் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அல்-அஹெட் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் …

Read More »

புலனாய்வுத்துறையின் பெயரில் கிளிநொச்சில் துண்டுப் பிரசுரங்கள்!

புலனாய்வுத்துறை

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் …

Read More »

வவுனியாவில் நபரொருவர் படுகொலை

வவுனியாவில்

வவுனியா – பூவரசங்குளம் – சாளம்பைக்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உந்துருளியில் சென்ற இருவர் நேற்று இரவு, கூரிய ஆயுதத்தின் மூலம் தாக்கி இந்த கொலையை புரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Read More »

கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கைதான யாழ்

விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடராதிருக்கும் வகையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்யும் வகையில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 05 வைகாசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 05-05-2019, சித்திரை 22, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.59 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை விரதம். (சிலர்) முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – …

Read More »

பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள்

தேடுதல் நடவடிக்கைகள்

சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன தொடர்பில் நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய திக்வெல்ல – யோனகபுர பகுதியில் 2500 சிம் அட்டைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி கோட்டை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஈயத்தினாலான 669 சிறிய பந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய காவி உடைகள் உள்ளிட்ட …

Read More »