ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலம் தெளிவாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

20 நாட்கள் உடலில் ஒட்டு துணியில்லாமல் நடித்தாரா அமலாபால்?

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …