தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா டிவிக்கு வருகிறார் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு உருவாக்கப்பட்டது.
அவர் பிக் பாஸ் தொகுத்து வழங்கப் போகிறார், ஒரு ஷோவிற்கு நடுவராக வரப் போகிறார், ஒரு ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கப் போகிறார் என பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த பரபரப்பு தற்போது ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டது.
கலர்ஸ் டிவியில் வரும் மே 12ம் தேதி நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை டிவியில் ஒளிபரப்ப உள்ளதைத்தான் அந்த சேனல் சில வாரங்களுக்கு முன்பே புரோமோ போட்டு, ஏதோ நயன்தாராவே டிவிக்கு வருவதைப் போல பொய்த் தோற்றத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே, ஆர்யா மணப்பெண் தேடும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி, எந்த மணப்பெண்ணையும் தேர்வு செய்யாமல் ரசிகர்களை ஏமாற்றிய கலர்ஸ் டிவி,
இப்போது நயன்தாரா நடித்த படத்தை ஒளிபரப்புவதை தேவையில்லாமல் ஒரு பரபரப்பு ஏற்படுத்தியதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.