திருகோணமலை கத்திகுத்து சம்பவத்தில் உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள் இருவரும் இவர்கள் தான்
சிங்களவனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம்ம ஆட்டே காரனுக்கு இல்லாமல் போய் விட்டது..
தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும்,
சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேயமும்
மனிதன் சுவாசமும் குருதிப்பெருக்கும் தடுக்கும் முதலுதவி செய்தால் 50%வீதம் உயிர் காப்பாற்றப்படும் அதைக்கூட முடியாத சமுகத்தில் ஒரு இளைஞனின் உயிர் போனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது!!!
தனுஸ்டன் கழுத்து கீழ் பாகம் வாதனாளி மற்றும் குருதிக்குழாய் கத்தியினால் வெட்டப்பட்டு உடலிருந்த குருதி குபு குபு என அவன் அணிந்திருந்த டீசட் பூராக நனையும் அளவு வெளியேறினால் என்ன நிகழும் பிரசர் ,சீனியின் அளவு குறைந்து செல்கின்றது அதுதான் அந்த இளைஞனின் ஓட்டத்தில் கூட ஒரு தள்ளாட்டம் புலப்படுகின்றது ,மறுமுனை சுவாசப்பாதை ஆரம்பத்தின் வாதனாளி பாதிப்பு ஏற்பட்டால் சுவாசம் குறைந்தால் உடல் நீலமடைகின்றது இப்படி 30நிமிடம் மேல் வீதி பூராக ஓடி ஒரு இடத்தில் பொதுமக்களின் பணத்தை சம்பாதிக்க ஆவலுடன் காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதியை சுற்றி கெஞ்சுகின்றான் அவர் ஒரு கணம் நினைத்திருந்தால் அவனின் கழுத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தை தடை செய்ய தமது சேட்டையாவது கிழித்து இறுக காயத்துக்கு கட்டுப்போட்டு வைத்தியசாலை கொண்டு சென்றிருந்தால் இன்று இலங்கையில் சகல இன மக்களால் போற்றப்பட்டு ஒரு உற்றுநோக்கப்பட வேண்டியவராயிருந்திருப்பார்,
இறுதியில் கடற்படை தலமயகம் முன் சுவாசம் தடை நிலை அடையும் போது கடற்படையினர் துணியால் கழுத்தை இறுக்கி கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலை நோக்கி அனுப்பினார்கள் ஆனால் அங்கு சேர்க்கும் முன்னரே உயிரிழந்தான்.காரணம் யாது???முதலுதவி செய்வதில்ல் ஏற்பட்ட தாமதமே,
முதலுதவி எனும் போது வைத்தியசாலை கொண்டு சேர்ப்பதும் ஒரு முதலுதவி நடவடிக்கை அங்கமே.இதைதான் ஆரம்பத்தில் தனிஸ்டன் கெஞ்சிய முச்சக்கர வண்டி சாரதிடம் அணைவரும் எதிர்பார்த்தோம் எனது ஆதங்கம் கூட,
எது எப்படியிருப்பினும் எமது மக்கள் இவ் இளைஞனின் உயிரிழப்பிலிருந்து எம்மால் செய்ய வேண்டிய முதலுதவியை செய்ய கற்றுக்கொண்டு எந்நேரமும் வீதியில் விபத்தோ அல்லது அனர்த்தமோ ஏற்படின் காப்பாற்ற பழகுங்கள் நன்றி.