நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சற்றுமுன் நடிகை குஷ்பு, நடிகர் பசுபதி, நடிகர் சார்லி ஆகியோர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் சங்க தேர்தலை அடுத்து பலத்த பாதுகாப்பு அந்த பள்ளியை சுற்றிலும் போடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …