இவர்கள் வெறுமனே

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இவர்களின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணே

இவர்களின் முன் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்த மண்ணே

அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இம் மண்ணே

இன்னுயிர் தந்து இவர்களை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இம் மண்ணே

இவர்களின் உறவுகள் தோளில் ஆயுதம் ஏந்தி சமர் புரிந்ததும் இம் மண்ணே

அவர்கள் உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும் தாங்கி நின்றதும் இம் மண்ணே

தங்கள் உறவுகளின் குருதி வடிந்த உடலை கண்ட இவர்கள்; மனம் வெறுமனே அடங்கித்தான் கிடந்திடுமோ?

இவர்கள் தமக்குரிய நியாயத்தை தமக்கே உரிய மொழியில் நிச்சயம் கேட்பார்கள்;

இவர்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்கள்.

அது “முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்” என்பதே.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் (புகைப்படத் தொகுப்பு)

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …