ஐநாவின் 74-வது பொதுசபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநாவின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக தலைவர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த தகவலும் இருக்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்று பேசுவது இது 2-வது முறையாகும்.
ஐ.நா பொதுச்சபை நிகழ்ச்சியை முடித்து விட்டு பிரதமர் மோடி தாயகம் திரும்ப உள்ளார்.
இந்த ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார்.
இதில் அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி