மீரா மிதுன்
மீரா மிதுன்

மத்திய அரசு பதவி பெற்ற மீரா மிதுன்..! குவியும் வாழ்த்துக்கள் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது.

பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.

அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் சென்னை விட்டு வெளியேறி மும்பையில் வசித்து வருகிறாராம். அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த மீரா மிதுன் அதிலிருந்து மீண்டு வர திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அரசியலில் குதிக்கப்போவதாக கூறி அதிரடி காட்டியிருந்தார். இதனை அறிந்த நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கிணடலடித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தி ஆதாரத்துடன் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது, (State Director of Anti-corruption committee) லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக மீரா மிதுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்திலிருந்து இவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்திருந்த கடிதத்தை பதிவிட்டு, இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” நான் கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் மீராவுக்கு இப்படி ஒரு வாழ்வா..? என வாய்பிளந்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1195006832906924037

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …