அமைதியான நாட்டை தாம் தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்திருந்தாலும், தற்போது நாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய படையினர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அவர்களும் பொறுப்பாளிகள் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.