விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக அட்லி தரப்பில் வாதிடப்பட்டது.
பிகில் படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது.
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, செல்வா என்ற உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
படத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்தார். அதேநேரம், விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக அட்லி தரப்பில் வாதிடப்பட்டது.
இவ்வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
இதையும் பாருங்க :
இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா?