பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் ஆளாக மக்களால் காப்பாற்றப்பட்டார். தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
அதில் இந்த வாரம் இரண்டாவது ஆளாக யார் காப்பாற்றப்படுவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கமல்ஹாசன் ரசிகர்களிடையே கேட்கிறார்.
https://twitter.com/vijaytelevision/status/1150291359086985216
அதற்கு ரசிகர்கள் மது.. மது.. என்று சொல்ல உடனே கமல் மதுமிதா இந்த வாரம் காப்பாற்றப்பட்டார் என்று கூறுகிறார்.
இதை பார்த்த சாண்டி, மதுமிதா போல் நடித்துக் காட்டி கேலி செய்ததால் அனைவரும் சிரித்து என்ஜாய் செய்வது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.