அரசியல்

கமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி! எத்தனை தொகுதி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த ஆண்டு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்ததை மற்ற அரசியல் கட்சிகள் ஆச்சரியமாக பார்த்தன.

இந்த நிலையில் நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் செ.கு.தமிழரசனுடன் கமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும், மூன்று சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று கூட்டணி கட்சிக்கு தொகுதியை கமல் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசன், ‘மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

எங்கள் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளில் பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கூறினார்.

எனவே தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, தினகரன் கூட்டணி, மற்றும் சீமான் கட்சி கூட்டணி என ஐந்து முனை போட்டிகள் உருவாகியுள்ளது

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …