கமல்

சீண்டிய பொன்னார்: கடுப்பான கமல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பொன்.ராதாகிருஷ்ணன் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள டார்ச்லைட் சின்னத்தை விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் நோட்டாவோடு போட்டிபோடும் கட்சியை டார்ச்லைட் வச்சு தேடனும் என விமர்சித்துள்ளார்.

கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது.

இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், டார்ச் லைட் வைத்து தான் கமல்ஹாசன் கட்சியின் மய்யத்தை தேட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் பொன்ராதாகிருஷ்ணனிற்கு பதிலடி கொடுக்கும்விதமாக நோட்டாவோடு போட்டிபோடும் கட்சியை டார்ச்லைட் வச்சு தேடனும், பேசாமல் தேர்தல் ஆணையம் நோட்டா சின்னத்தை பாஜகவிற்கு கொடுக்கலாம் என கிண்டலாக பேசினார்.

About அருள்

Check Also

ரஜினி

”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!6Sharesரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் …