” இதயத்தின் மௌனராகம்….”
இமைகள் மூடாமலே
இதயம் சேராமலே
இன்னுயிர் தேடியே
இதயம் தடுமாறுவதேனோ…..
இசைக்கும் குயிலே
இசைத்திடு அனுதினமும்
இரவினால் அவளும்
இரவினை வாட்டுவதேனோ……
இதயக் குழியிலே
இதமான வேளையிலே
இசை ராகத்தோடு
இதயம் துடிக்கிறதேனோ……
இதய அறையிலே
இதயத் துடிப்பிலே
இசைக்கின்ற என்னையே
இம்சை செய்வதேனோ……
இறக்கைகள் இன்றிய
இன்னிசை இராகமே
இனியவள் நினைவிலே
இமைக்காமல் துடிப்பதேனோ……
இமயமலை நீரிலே
இசைத்திடும் நதியிலே
இயல்பாக என்னையும்
இரசிக்க வைப்பதேனோ……
கவிஞர் த. வினோத்.
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.