கங்கை

கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத்.

இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார்.

இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது நண்பர்களும் ஹரித்துவாரிலிருந்து, புனித யாத்திரை முடித்த பின்னர் , பூஜை செய்வதற்க்காக கங்கை நீரை கொண்டுவந்தோம்.

அப்பொழுது கங்கை நீரை எடுத்து வந்தது இஸ்லாம் மதத்துக்கு விரோதமானது எனக் கூறி சிலர் எங்களை தாக்கினர்.

அதில் நண்பர்களுக்கும் ,என் தந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது என்று கவலையுடன் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …