குஷ்பு
குஷ்பு

சின்னத் தம்பி படம் ரீமேக் ஆகிறதா ? குஷ்பு பதில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அவர் நடிகையாகவும், காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபு – குஷ்பு நடிப்பில் வெளியான படத்தினை தற்போது ரீமேக் செய்வதாகப் பேச்சு எழுகிறது.
இதுகுறித்து குஷ்பு கூறியதாவது :

நான் சின்னத்தம்பி படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்தேன். பி.வாசு சார் அந்தக் கதாபாத்திரத்தை நன்றாகச் செதுக்கி இருந்தார்.

படத்தின் இறுதிக் காட்சிகளும் கதாநாயகிக்கு முக்கியத்துவமாக இருந்தது. அந்தக் காட்சியை வட இந்திய நடிகை ஒருவர் பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார்.

இப்படத்தில் ஹீரோ பிரபு சாரும் தன் இமேஜை விட்டுக்கொடுத்து நடித்தார். ஒருவேளை தற்போது இப்படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் என் கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் ஹீரோ கதாபாத்திரத்திலும், மனோரமா கதாபாத்திரத்திலும் யார் நடிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …