நித்தியானந்தா

புது பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தா! நிராகரித்த வெளியுறவுத்துறை அமைச்சகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புது பாஸ்போர்ட் கோரிய நித்தியானந்தாவின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் நித்தியானந்தா. அவருடைய இயற்பெயர் ராஜசேகரன். அவர், 2000-ம் ஆண்டில் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் ஆஷ்ரமம் தொடங்கினார். அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்துவருகிறார்கள்.

2010-ம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் வீடியோ வெளியானது. பின்னர், வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தனது மூன்று பெண் குழந்தைகளை மீட்டுத் தரவேண்டும் என்று நித்தியானந்தாவின் முன்னாள் செயலாளர் தமிழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா குஜராத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பாக குஜராத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், கர்நாடாக மாநிலத்தில் நித்தியானந்தா மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக நித்தியானந்தா பாஸ்போர்ட் இல்லாமலேயே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இத்தகைய பரபரப்புக்கு இடையில் கைலாசா என்று இந்து நாடு உருவாக்கப்போவதாக கூறிய நித்தியானந்தா அந்நாட்டுக்கென்று பாஸ்போர்ட், சட்டவிதிமுறைகள் எல்லாம் உருவாக்கத் தொடங்கிவிட்டார்.

இந்தநிலையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்டை ரத்து செய்துவிட்டதாகவும், புது பாஸ்போர்ட் கோரிய நித்தியானந்தா விண்ணப்பத்தையும் ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …