கோட்டாபய
கோத்தபாய ராஜபக்ச

தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தேர்தல் அல்ல, நாட்டுக்கும், இனங்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் தான் அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினர் மீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது.

மனித உரிமைகள் போன்று தேசிய பாதுகாப்பும் முக்கியத்துவமானது.

தேசிய பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையானது.

தேசிய பாதுகாப்பு இன்றி, சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமா என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …