பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யாரு வெளியேறப் போகிறார் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.
மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.
கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றாமல், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார்.
இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் ஏழு பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் உள்ளனர்.
சரவணன், ஃபாத்திமா பாபு, சாக்ஷி அகர்வால், மதுமிதா, மீரா மிதுன், சேரன், கவின் ஆகியோர் இந்த நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.
இந்த லிஸ்ட் அறிவிக்கப்பட்ட பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து மீரா மிதுன் தான் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கமல் பங்குபெறும் வார இறுதி நிகழ்ச்சி ஷூட்டிங் நடைபெறும்.
அப்போதே உள்ளிருக்கும் பார்வையாளர்கள் பலரால் யார் இந்த வாரம் வெளியேற்றப் பட்டார்கள் என்று தகவல் கசிந்து விடும்.
அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவத் தொடங்கியுள்ளது.
அது நாம் எதிர்பார்த்த மீரா மிதுன் அல்ல, பாத்திமா பாபுவாம்.
இதற்கு காரணம் என்ன வென்றால் பாத்திமா சண்டை போடாமல், வீட்டுக்கு ஒரு அம்மாவாகத் தான் எல்லோரிடத்திலும் பழகி வருகிறார்.
ஆதனால் அவரால் எந்த ஒரு பரபரப்புக் காட்சியும் நடைபெறவில்லை என்பதால் அவரை சானல் தரப்பே வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.