விஜய்

விஜய்யை பற்றி அப்படி பேசியது தவறு தான்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விஜய்யை அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசியிருக்கக்கூடாது எனவும் அது தவறுதான் எனவும் நடிகர் கருணாகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.

ஏனென்றால் கருணாகரன் விஜய் பற்றி பேசுகையில் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஊருக்கு மட்டுமே அட்வைஸ் பண்ணக்கூடாது. தாமும் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இவர்கள் இப்படி செய்வது தனக்கு விஜய் மீதான மரியாதையை குறைக்க செய்கிறது என கருணாகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் கருணாகரன் தற்போது டிவிட்டரில் நான் அப்படி விஜய்யை பேசியது தவறு தான். நான் பேசியது யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் சாரி என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஏன் திடீரென இப்படி கூறியுள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

About அருள்

Check Also

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு …