ஒகேனக்கல்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா – தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வபோது அதிகரித்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 65-வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது: சீன அதிபர்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …