நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, முதற்கட்டமாக போக்குவரத்து துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.14 ஆயிரத்து 988 பேருந்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன.
இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5 ஆயிரத்து 595 மின்சார பேருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதில் தமிழகத்துக்கு 525 மின்சார பேருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பேருந்துகளும், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பேருந்துகளும் அனுப்பப்படுகிறது.